×

வைரமுத்து மீது செருப்பு வீச்சு

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று காலை பெண் ஒருவர் கையில் மனுக்களை வைத்துக்கொண்டு பல்வேறு அமைப்புகளில் இருப்பதாகவும், முன்னாள் எம்எல்ஏ.வின் மகள் எனவும் கூறி சாலையில் அமர்ந்து கூச்சலிட்டவாறு இருந்தார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்த கவிஞர் வைரமுத்துவிற்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர். திடீரென அந்த பெண் தனது செருப்புகளை கழற்றி வைரமுத்து மீது வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அப்பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அப்பெண் திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

Tags : Vairamuthu ,Tiruppur ,Tiruppur Palladam Road ,District Collector's Office ,
× RELATED பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி...