×

தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சிமெண்ட் தளம் அமைக்க கோரிக்கை

திருப்பூர், ஜன.29: திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் சேரும், சகதியுமாக உள்ளதால் சிமெண்ட் தளம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர், பல்லடம் ரோடு, பகுதியில் தென்னம்பாளையம் பகுதியில் தினசரி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை நேரடியாக எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதை வாங்க வெள்ளியங்காடு உள்ளிட்ட திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்கி செல்கின்றனர். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்க பொதுமக்களும் அதிகமாக வருவார்கள். இந்நிலையில், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மேற்கூரை அமைத்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தும் அதற்கு தரைத்தளம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், லேசான மழை பெய்தால் கூட அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாகிறது. இதனால் வியாபாரிகாள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சிமெண்ட் தளம் அமைத்து தர வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : cement base ,
× RELATED வளையல்காரன்புதூர் பயணிகள்...