- கந்தர்வகோட்டை
- கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலை
- கந்தர்வகோட்டை ஊராட்சி
- தஞ்சாவூர்-புதுக்காய் தேசிய நெடுஞ்சாலை
- கந்தர்வகோட்டையின்…
கந்தர்வகோட்டை, ஜன.22: கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் தெரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். கந்தர்வகோட்டை ஊராட்சி தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலை மையப் பகுதியில் உள்ளது. இந்த சாலையில் தான் கந்தர்வகோட்டையின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் கடைகள் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன.
இந்தப் பகுதியில் மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித் திரிவதும், சாலையின் குறுக்கே சென்று வரும் வாகனங்களை தடுமாறச் செய்வதும், இருசக்கர வாகன ஓட்டிகளை கீழே விழ வைப்பதும், இந்த விபத்துகளால் பலபேர் காயமடைந்து பெரும் துன்பத்துக்கும் துயரத்துக்கும் உள்ளாகி வருகின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கைப்பற்றி கோசாலைகளுக்கு அனுப்ப வேண்டும். சாலைகளில் மாடு உள்ளிட்ட கால்நடைகளை விட்டுள்ள உரிமையாளர்களுக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்க வேண்டும். கடும் சட்ட நடவடிக்கை எடுத்து சுற்றி தெரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
