மும்பை: ஒரு டாலர் 91 ரூபாய் 28 காசுகள் என்ற அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. காலையில் ஒரு டாலர் ரூ.91.05 என்ற அளவில் தொடங்கிய ரூபாயின் மாற்று மதிப்பு சிறிது நேரத்தில் 31 காசுகள் சரிந்தன. புதுப்புது நாடுகளைக் கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிவருவதால் உலக அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் பதற்றம், வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
