×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்

சிவகங்கை,ஜன.21: கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 1.1.2026ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18வயது பூர்த்தியானவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் மற்றும் திருத்தம் செய்வதற்குமான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.முகாம்களில் படிவம் வழங்காத 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கு மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் மற்றும் பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும் கடந்த 18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஜன.30ம் தேதி வரை வழங்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Sivagangai ,Collector ,Porkodi ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை