×

திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிப்பு..!!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை அறிவிப்புகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன், வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அதிகம் கூடும் இடமான திருக்கோயிலின் முன்புள்ள சண்முக விலாச மண்டபம், உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், வசந்த மண்டபம், பக்தர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் வரிசை, அன்னதானக்கூடம் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

அந்த எச்சரிக்கை பதாகையில், “இத்திருக்கோயில் வளாகத்தில் திரைப்படப்பாடல்களை பாடி நடனம் ஆடுவது, அதை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுதல் போன்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம். மேற்படி கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் மற்றும் வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுக்கும் பட்சத்தில் செல்போன் அல்லது வீடியோ கேமரா பறிமுதல் செய்யப்பட்டு ரீல்ஸ் எடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tiruchendoor Murugan temple complex ,Tricendoor ,Murugan temple ,Tiruchendur ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில்...