×

எச்சரிக்கையை மீறியதால் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி: ஆஸ்திரியாவில் சோகம்

 

வியன்னா: ஆஸ்திரியா நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட அடுத்தடுத்த பயங்கர பனிச்சரிவில் சிக்கி 8 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆஸ்திரியா நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், ஆபத்து நிலை ஐந்திற்கு மூன்று என்ற அளவில் இருப்பதாகவும் அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். முன்னதாக இந்த வார துவக்கத்தில் பேட் காஸ்டீன் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து மூன்று இடங்களில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. பேட் ஹாப்காஸ்டீன் பகுதியில் ஏற்பட்ட முதல் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து சுமார் 90 நிமிடங்களுக்குப் பிறகு காஸ்டீன் பள்ளத்தாக்கில் நடந்த இரண்டாவது விபத்தில் 7 பேர் கொண்ட குழுவினர் சிக்கிக் கொண்டனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் படுகாயமடைந்தனர். மாலையில் ஸ்டிரியாவின் புஸ்டர்வால்ட் பகுதியில் நடந்த மூன்றாவது விபத்தில் செக் குடியரசைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் படையினர் உடல்களை மீட்டுள்ளனர். இது குறித்து மலை மீட்புக் குழுவைச் சேர்ந்த கெர்ஹார்ட் கிரெம்சர் கூறுகையில், ‘தெளிவான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் இந்த துயரச் சம்பவங்கள் நடந்துள்ளன’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Tags : Austria ,Vienna ,Alps ,
× RELATED ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள,...