காரைக்குடி: காரைக்குடி அருகே சிராவயலில் நடந்த ஜல்லிக்கட்டில் 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சிராவயலில் ஜல்லிக்கட்டை காண கூடியிருந்த மக்களை காளை முட்டியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காளை முட்டியதில் சிறுவர்கள், பெண்கள் என 80க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்த 80க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திருப்பத்தார், சிவகங்கை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிராவயலில் படுகாயமடைந்த 10 பேர் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
