சேலம்: சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர். சாலையின் தடுப்புச் சுவரை கார் இடித்து கொண்டு, எதிர்புறத்தில் வந்த மற்றொரு காரில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கிருத்தி கேஸ் என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் மற்றொரு காரில் இருந்த பிரியா(27), தஸ்விந்த்(4) உயிரிழந்தனர்.
