டெல்லி: சட்டவிரோதமாக இயங்கி வந்த 242 ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட இணையதளங்களை முடக்கி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் நிதி மற்றும் சமூகத் தீங்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ஆன்லைன் கேமிங் சட்டத்தின்கீழ், இதுவரை 7,800 தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
