மதுரை: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியின் 2ம் சுற்று நிறைவடைந்துள்ளது. இரண்டாவது சுற்று முடிவில் சின்னப்பட்டி தமிழரசன் 6 காளைகளை பிடித்து முன்னிலையில் உள்ளார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசிராம் 4 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் 195 காளைகள் களம் கண்டது.
