×

திருப்பூர் குமரனின் புகழை நாடெங்கும் பரவ செய்வோம்: முதல்வர் வேண்டுகோள்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: காந்தியப் பாதையில் போராடி, அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு உயிர்துறந்த தியாகி திருப்பூர் குமரனின் நினைவுநாள்! இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற தமிழர்களின் பெருமையைப் போற்றும் நாம், கொடி காத்த குமரனின் திருவுருவச்சிலையை ஈரோட்டில் நிறுவியதோடு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சாலைக்குத் ‘தியாகி குமரன் சாலை’ என்றும் பெயர் சூட்டியுள்ளோம். இன்னுயிரை விடவும் தன்மானமும் தாய்நாட்டுப் பற்றும் பெரிதென வாழ்ந்த திருப்பூர் குமரனின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம்.

Tags : Tirupur Kumaran ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Tamils ,
× RELATED தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை