×

ஐபேக் நிறுவன ரெய்டு; உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு

புதுடெல்லி: நிலக்கரி ஊழல் தொடர்பாக ஐபேக் அலுவலகம் மற்றும் அதன் இயக்குநர் பிரதீப் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சோதனையில் முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட மேற்கு வங்க அரசு தலையிட்டு இடையூறு செய்வதாக கூறி அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மேற்கு வங்க அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே விவகாரத்தில் அமலாக்கத்துறை சிபிஐ விசாரணை கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்திலும் அமலாக்கத்துறை முறையிட்டு சிபிஐ விசாரணை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : IPAC ,Enforcement Directorate ,Supreme Court ,New Delhi ,West Bengal government ,Chief Minister ,Mamata Banerjee ,Pradeep Jain ,
× RELATED அந்நிய படையெடுப்பாளர்களால் அழிக்க...