×

இன்று குடியரசு தின விழா கலெக்டர் கொடியேற்றுகிறார்


சேலம், ஜன.26: குடியரசு தினத்தையொட்டி சேலம் காந்தி ஸ்ேடடியத்தில் கலெக்டர் கொடியேற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். நாட்டின் 72வது குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ஓட்டல்கள், லாட்ஜ்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், எஸ்.பி.தீபா தலைமையில் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்) காலை 8.05 மணிக்கு சேலம் காந்தி ஸ்டேடியத்தில் கலெக்டர் ராமன், தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

சுதந்திரப்போராட்ட தியாகிகள், அவர்களின் குடும்பத்தினர் வீடுகளுக்கே சென்று கவுரவிக்கப்படுகின்றனர். மேலும் சிறப்பாக பணியாற்றிய சேலம் மேற்கு குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பூபதிராஜன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பொன்ராஜ், எஸ்.ஐக்கள் ராம கிருஷ்ணன், முரளி, கார்த்திகேயன், மாதேஷ்வரன், பாரதிராஜா, சிறப்பு எஸ்.ஐக்கள் தட்சிணாமூர்த்தி, முத்துவேல், ஏட்டுக்கள் பாஸ்கரன், செந்தில்குமார், பாலசுப்பிரமணி, சங்கீதா, மற்றும் கண்காணிப்பாளர் அனிதா ஆகியோருக்கு நன்சான்றிதழ் வழங்கப்படுகிறது. காவல்துறையில் எந்தவித தவறுகளுக்கும் இடம்கொடுக்காமல் பணியாற்றிய ஏட்டுகள் டவுன் செல்வராஜ், சண்முகவள்ளி, சுமதி, பிரியாகுமாரி,  மைவிழிச்செல்வி, பச்சியம்மாள், ஸ்ரீதேவி, சத்தியவதி, லதா, முத்துமாரி, கவிதா, இந்திரா, வசந்தி, விஜயலட்சுமி உள்பட58 பேர் முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெறுகின்றனர்.

Tags : flag hoisting ,Collector ,Republic Day ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை...