×

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை: மது விற்றால் கடும் நடடிக்கை

சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: வருகிற 16ம் தேதி திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை), 26ம் தேதி குடியரசு தினம் (திங்கட்கிழமை) மற்றும் பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் வள்ளலார் நினைவு தினம் வருகிறது. இந்த தினங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த தினத்தன்று மதுவகைகள் விற்பனை செய்யக்கூடாது. இந்த நாளில் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அனைத்து கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்​நாடு மது​பான சில்​லரை விற்​பனை விதி​கள் மற்​றும் தமிழ்​நாடு மதுபானம் விதி​கள் ஆகிய​வற்​றின் கீழ் மாவட்​டத்​தில் உள்ள அனைத்து டாஸ்​மாக், மது​பான சில்​லரை விற்​பனை கடைகள் மற்​றும் பார்​கள், உரிமம் பெற்ற கிளப் பார்​கள், ஓட்​டல் பார்​கள் என அனைத்​தும் மூடப்பட வேண்​டும். அறி​விப்பை மீறி மது விற்​பனை செய்​தால், மது​பானம் விற்​பனை விதி​களின்​படி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர்.

Tags : Thiruvalluvar Day ,Republic Day ,Vallalar Memorial Day ,TASMAC ,Chennai ,Tamil Nadu government ,Vadalur Vallalar Memorial Day ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில்...