×

புதுவையில் குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை ரூ.2500 ஆக அதிகரிப்பு: அடுத்த மாதம் அமல்; அரசாணை வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் தேஜ கூட்டணி அரசில் கடந்த 2022-2023 பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 மாத உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசின் வேறு எந்த உதவித்தொகையும் பெறாத (சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள) வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குட்பட்ட குடும்ப தலைவிகள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 2023 ஜனவரி மாதம் முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. முதல்கட்டமாக 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது 75 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவர்களுக்கான உதவித்தொகை ரூ.2500 ஆகவும், மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி குடும்ப தலைவிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட நிதி உதவித்தொகை அடுத்த மாதம் முதல் பயனாளிகளுக்கு கிடைக்கும். இத்திட்டத்தை வரும் 22ம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார்.

Tags : Puducherry ,Teja coalition government ,
× RELATED துபாயில் நடந்த கார் பந்தயத்தில்...