×

குடிநீர் வாரியம் சார்பில் இன்று குறைதீர் கூட்டம்

சென்னை, ஜன.10: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறைதீர் கூட்டம் மாதம்தோறும் 2வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் 10ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும். ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கூட்டம் நடைபெறும். எனவே, இந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம்.

Tags : Chennai Water Supply Board ,Chennai ,Water Supply Board… ,
× RELATED மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயிலில் ரூ.54.65...