- அமைச்சர்
- சேகர்பாபு
- அனானனா ஹால்
- சாண்டி மல்லிகேஸ்வரர் கோயில்
- சென்னை
- பி. கே. சாகர்பாபு
- இந்து சமய அறக்கட்டளை துறை
- குதருர்
சென்னை, ஜன.22: சென்னை மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயிலில் ரூ.54.65லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அன்னதான கூடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து நேற்று வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை செம்மையாக செய்து வருகிறது. அந்த வகையில், சென்னை மண்ணடியில் அமைந்துள்ள சுமார் 700 ஆண்டுகள் பழமையான மல்லிகேஸ்வரர் கோயிலில், ரூ.54.65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அன்னதான கூடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பக்தர்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ரூ.131 கோடி மதிப்பீட்டில் 147 புதிய அன்னதான கூடங்கள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 35 அன்னதான கூடங்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், மேயர் பிரியா, இணை ஆணையர் முல்லை, மாநகராட்சி மண்டல குழு தலைவர் ராமுலு, மாநகராட்சி உறுப்பினர் பரிமளம், கோயில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கட கோபாலகிருஷ்ணன், அறங்காவலர்கள் மெய்யப்பன், மலர்செல்வி, ரமேஷ்குமார், சோழன், செயல் அலுவலர் முத்துராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
