- ஜனநாயக
- Icourt
- சென்னை
- தலைமை நீதிபதி
- சென்னை உயர் நீதிமன்றம்
- நீதிபதி
- பி.டி. ஆஷா
- ஆஷா
- பெடரல் திரைப்பட தணிக்கை
சென்னை: ஜனநாயகன் படத்தை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A சான்று வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டிருந்தார். நீதிபதி ஆஷா உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்த்வா, நீதிபதி அருள் முருகன் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல்; தனி நீதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
உரிய பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் தரவில்லை. ஜனவரி 7ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டபோது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தணிக்கை வாரிய தலைவருக்கு படத்தை மறு ஆய்வுசெய்ய பரிந்துரைக்க உரிமை உண்டு என்று வாதிட்டார். தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி; சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? தணிக்கை வாரிய உறுப்பினர் எப்படி புகார் எழுப்ப முடியும்? தணிக்கை வாரிய தலைவருக்கு பதில் தர அவகாசம் தராமலேயே நீதிபதி எப்படி உத்தரவிட்டார்? சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை தயாரிப்பு படத் நிறுவனம் எப்படி முடிவு செய்தது நீதிமன்றத்துக்கு ஏன் அழுத்தம் தருகிறீர்கள்?
படத்தயாரிப்பாளர் பொய்யாக ஒரு அவசரத்தை உருவாக்கி சான்றிதழ் வழங்கக் கோரி நீதிமன்றத்துக்கு எப்படி அழுத்தம் தர முடியும்? போலியான அவசரத்தை கூறி நீதிமன்றத்துக்கு அழுத்தம் தந்தது ஏன்? ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டோம் என்பதற்காகவே எல்லோரும் உங்கள் விருப்பத்துக்கு செயல்பட முடியுமா? ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்த்வா, நீதிபதி அருள் முருகன் அமர்வு உத்தரவிட்டுள்ளார்.தொடர்ந்து ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். தணிக்கைச்சான்று வழக்கு நிலுவையில் உள்ளதால் பொங்கலுக்கு ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.
