×

மம்தா பானர்ஜி பெண் புலி: அவர் திறம்பட அவர்களை எதிர்த்து போரிடுவார், சரணடையமாட்டார்: மெகபூபா முஃப்தி

 

ஸ்ரீநகர்: மம்தா பானர்ஜி பெண் புலி: அவர் திறம்பட அவர்களை எதிர்த்து போரிடுவார், சரணடையமாட்டார் என்று மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் நிலக்கரி கடத்தல் ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் தலைவர் பிரதிக் ஜெயின் வீட்டில் நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குச் சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மாநிலக் காவல்துறையினர் உதவியுடன் அங்கிருந்த முக்கிய மின்னணுச் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய ஒரு பெரிய பச்சைக் கோப்பை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், சால்ட் லேக் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கும் சென்று மம்தா பானர்ஜி மற்றும் அவரது உதவியாளர்கள் அங்கிருந்தும் சில ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளனர். இவ்விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து பேசிய மெகபூபா முஃப்தி; ஜம்மு காஷ்மீரில் அமலாக்கத்துறை அல்லது பிற புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகள் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது, இப்போது நாடு மொத்தமும் அதை அனுபவித்து வருகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட போது, சோதனைகள் நடக்கும்போது, மூன்று முதல்வர்களை சிறையில் அடைக்கப்பட்டபோது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் மவுனம் காத்தன. தற்போது இந்த நிலைய நாடு முழுவதும் பார்க்க முடிகிறது. மம்தா பானர்ஜி தைரியமானவர்.

அவர் பெண் புலி, அவர் திறம்பட அவர்களை எதிர்த்து போரிடுவார், சரணடையமாட்டார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags : Mamta Banerjee ,Megabupa ,Mufti ,Srinagar ,Mamata Banerjee ,Meghbooba Mufti ,Union State Enforcement Department ,West Bengal ,
× RELATED 2030ம் ஆண்டிற்கான தொலைநோக்கு...