கடலூர்: கூட்டணி பற்றி முடிவெடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு முழு அதிகாரம் என தேமுதிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடந்த தேமுதிக மாநாட்டில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
* சாதி, மத ரீதியான மோதல்களை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை ஒன்றிய அரசு தலையிட்டு மீட்டெடுத்து, தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
* என்எல்சி நிறுவனம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வீடு மற்றும் நிலம் கொடுத்தவர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சொசைட்டி ஊழியர்களுக்கும் பணி நிரந்தரம்
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பும், 3000 ரூபாய் பணமும் வழங்க வேண்டும். மேலும் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும்.
* தமிழகத்தில் அனைத்து நதிகளையும் இணைக்கும் வகையிலான திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்
* விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றும் வகையில் விவசாயிகள் மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும், நெல்மணிகளை பாதுகாக்க போதுமான கிடங்குகள் அமைக்க வேண்டும்
* தேமுதிக தலைவர் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களின் சமூக சேவை, அரசியல் பங்களிப்பு, சாதனைகளையும், தமிழக மக்களுக்கு அவர் ஆற்றிய மகத்தான பணிகளையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு நாட்டிற் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அதுபோல் தமிழக அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் கேப்டன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.
* கூட்டணி பற்றி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தையும் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு வழங்கி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
