×

கோபி அருகே கஞ்சா விற்ற பெண் குண்டாசில் அடைப்பு

கோபி, ஜன. 9: கொங்கர்பாளையத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். கோபி அருகே உள்ள கொங்கர்பாளையம் முத்துகருப்பன் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி தேவி (57). கடந்த சில நாட்களுக்கு முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தேவியை கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தேவியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா, மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து தேவியை குண்டாசில் கைது செய்து, சிறையில் அடைக்க கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மகளிர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags : Gopi ,Konkarpalayam ,Devi ,Arumugam ,Muthukaruppan Road, Konkarpalayam ,
× RELATED விஇடி கல்லூரியில் ஒடிசி பாரம்பரிய நடன நிகழ்ச்சி