6 மாவட்டங்களில் 30 பேருக்கு கொரோனா

மதுரை, ஜன. 26: மதுரை உள்பட 6 மாவட்டங்களில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 11 பேர், குறைந்தபட்சமாக தேனி, விருதுநகரில் தலா ஒருவர் என இருவர் தொற்றுக்கு ஆளாகினர். திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பேர், சிவகங்கை மாவட்டத்தில் 6 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேர் கொரோனாவிற்கு ஆளாகினர். நேற்று மொத்தம் 30 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில்,  இதுவரை 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா சிகிச்சையில் இருப்போரில் 6 மாவட்டங்களிலும் யாரும் பலியாகவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>