விருதுநகர், ஜன. 8: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பென்ஷன் ரூ.6,750 அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு, இளநிலை உதவியாளர் நிலையில் ரூ.19,500 வழங்க வேண்டும். சமையலர், உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.15700 காலவறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடியில் உள்ள 60,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
