- ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி
- Jayankondam
- எம்.எல்.ஏ கண்ணன்
- ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி
- அரியலூர் மாவட்டம்
- தா
- பழூர்
- ஐடிஐ
ஜெயங்கொண்டம், ஜன.8: ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மடிக்கணினி வழங்கினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தா. பழூர் ஐடிஐ மாணவ, மாணவிகளுக்கும் 288 பேருக்கு மடிக்கணினி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், தமிழக முதலமைச்சர் தளபதியார் உயர் படிப்பு பயிலும் 10 லட்சம் மாணவ,
மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கியதைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 265 மாணவ, மாணவிளுக்கும், தா.பழூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 23 மாணவ, மாணவிகள், மொத்தம் 288 பேருக்கு மடிக்கணினியை, எம்எல்ஏ கண்ணன் வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ராசமூர்த்தி, ஐடிஐ முதல்வர் ஜான் பாட்ஷா, கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் ரமேஷ், ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தனசேகர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
