- சிவஞானபுரம்
- விளாத்திகுளம்
- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ
- சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி
- விளாத்திகுளம் தாலுக்கா
விளாத்திகுளம், ஜன. 8: சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்றார். விளாத்திகுளம் வட்டம் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில் மாணவ- மாணவியர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள், முக பாவனைகள் மூலம் கருத்துகளை வெளிப்படுத்தும் மைம் நிகழ்ச்சி, 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டம்,ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும், கபடி, வாலிபால் உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து கடந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியருக்கும் நடப்பாண்டில் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவியருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, விளாத்திகுளம் ஆணையாளர் ரஞ்சித், திமுக விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் (மேற்கு) அன்புராஜன், (மத்திய) ராமசுப்பு, (தெற்கு) இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி ஆதிசங்கர், ஒன்றிய துணை செயலாளர் காளிராஜ் பாண்டியன், ஊராட்சி முன்னாள் தலைவர் தண்டபாணி உள்பட பெற்றோர், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
