ராமநாதபுரம்,ஜன.8: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சகாய தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்கக்கூடிய ரூ.6750ஐ ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
