×

அருமனை அருகே ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு

 

அருமனை, ஜன.6 : அருமனை அருகே மேல்புறம் மருதங்கோடு முல்லை பழஞ்சுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் தனது வீட்டின் அருகே ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே வந்த மர்மவிலங்கு பட்டியில் கட்டியிருந்த 2 ஆடுகளை கடித்து கொன்றது. இது குறித்து களியல் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது வீட்டின் அருகே வளர்க்கப்பட்ட ஆட்டையும் மர்ம விலங்கு கடித்து கொன்றது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தொடர்ந்து ஆடுகளை கொன்று வரும் மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆடுகளை கொன்றது காட்டு பூனையாக இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Arumanai ,Rajan ,Mullai Palanjuvilai ,Melpuram Maruthangod ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை