×

இறந்த நிலையில் முதியவர் சடலம் மீட்பு

திருக்காட்டுப்பள்ளி, ஜன.5: தஞ்சாவூர் மாவட்டம் மாறனேரி திரௌபதி அம்மன் கோயில் வாயிலில் இறந்த நிலையில் கிடந்த முதியவர் சடலத்தை பூதலூர் போலீசார் மீட்டனர். மாறனேரி திரௌபதி அம்மன் கோயில் வாசலில் இறந்த நிலையில் ஒரு முதியவரின் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், நிகழ்விடம் சென்று பார்வையிட்ட கிராம நிர்வாக அலுவலர் அருள்மாணிக்கம் இது குறித்து பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்று போலீஸார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டதில் அவர் புதுக்கோட்டை கீழ நாலாம் வீதியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் ஜெயராமன் (65) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags : Thirukattupally ,Puthalur ,Draupadi Amman temple ,Maraneri, Thanjavur district ,Maraneri… ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்