×

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன.6: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மாசிலாமணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை குறித்து பேசினார். இந்திய தொழிற்சங்க மைய நிர்வாகி சுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். மாவட்ட பொருளாளர் மாலதி நன்றி கூறினார். இதில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும். குடும்ப ஒய்வூதியம், ஈமச்சடங்கு, நிதி மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags : Anganwadi ,Karur District Collector ,Nagarajan ,District Vice President ,Masilamani ,District Secretary ,Balakrishnan ,Indian Trade Union Center ,Executive ,Subramanian… ,
× RELATED கிருஷ்ணராயபுரத்தில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கு நேர்காணல்