- கரூர்
- SSTA இடைநிலை பதிவு
- மூத்த
- ஆசிரியர் இயக்கம்
- கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம்
- மாவட்ட துணைத் தலைவர்
- சங்கரேஸ்வரி
கரூர், ஜன. 6: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்எஸ்டிஏ இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் ஊதிய மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சங்கரேஸ்வரி தலைமை வகித்தார். வட்ட செயலாளர்கள் சுரேஷ், செல்வராஜ், சாலினி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊதிய முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் ஊதியக்குழுவில் 36 மற்ற பிரிவினருக்கும் 3 நபர்கள் அடங்கிய ஊதிய குழுவில் 24 பிரிவினருக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது. பல நூற்றுக்கணக்கான பிரிவினருக்கும் ஊதிய முரண்பாடுகள் சரி செய்யப்பட்டது. எனவே, 2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
