- பெரம்பலூர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- பெரம்பலூர் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
பெரம்பலூர், ஜன.5: ஓய்வூதியம் சார்ந்த 23 ஆண்டுகால தொடர் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தமிழக அரசு அலுவலர்களுக்கும்,
அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை, புதிய வடிவில் கொண்டு வந்து, தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் 23 ஆண்டுகளாகப் போராடி வந்தனர். இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெடுஞ் சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தங்க.கண்ணன் தலைமையில் அரசு ஊழியர் கள் அலுவலர்கள், பொது மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்தனர்.
