×

நெல்லிக்குப்பம் ஊராட்சியில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

 

திருப்போரூர், ஜன.5. திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய நெல்லிக்குப்பம் ஊராட்சியில் தி.மு.க. பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் அன்புச்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதி கெஜராஜன், நிர்வாகி ராஜவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் நெல்லிக்குப்பம், அம்மாப்பேட்டை, அகரம் ஆகிய மூன்று கிராமங்களுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள், திமுக. நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்தும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் மேற்கொண்டுள்ள செயல்கள் குறித்தும் விவாதித்து அறிக்கை அளித்தனர். இவற்றை ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் பெற்றுக் கொண்டார். இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா நந்தகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் அம்மாப்பேட்டை கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Tags : Dimuka ,Booth ,Nellicupam Oratchee ,Thiruporur ,Nellikupam Oratchee ,Thiruporur Union ,Thi. M. K. Booth ,Executive Committee ,Anbucheshian ,Oradachi Assembly ,Parthasarathi ,District Representative ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 4.13...