- காஞ்சி
- பச்சையப்பன் பெண்கள்
- கல்லூரி
- தேசிய
- நலன்புரி சேவை
- முகாம்
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி
- தேசிய நல சேவை முகாம்
- கருப்பட்டி தட்டடை பஞ்சாயத்து
- முதல்வர்
- கோமதி
- என்.எஸ்.எஸ்
- திட்ட அலுவலர்
- சுபராணி
காஞ்சிபுரம், ஜன.6: காஞ்சிபுரம் அடுத்த கருப்படைதட்டடை ஊராட்சியில், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நேற்று நடந்தது.
கல்லூரி முதல்வர் கோமதி தலைமை தாங்கினார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சுபராணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கருப்படைதட்டடை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னா (எ) வெங்கடேசன் கலந்துகொண்டு, முகாமினை தொடங்கி வைத்து, தலைமை பண்புகள் குறித்து பேசினார். அலுவலர் சரண்யா ஒழுக்க நிலைகள் குறித்து பேசினார். ஒன்றிய கவுன்சிலர் பாலாஜி, சத்யா புகழேந்தி, மாணவர்களிடையே கலந்துரையாடினர்.
முகாமில், முதற்கட்ட கிராம புள்ளி விவரங்கள் சேகரித்தல், கிராம கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், மரம் நடுதல், கோயில் வளாகங்களை சுத்தப்படுத்தல் போன்ற பணிகளில் மாணவிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து, என்எஸ்எஸ் முகாம் நடைபெற்றது.
