திருச்சி: கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ெசல்லும் பக்தர்களுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று 2 விமானங்கள் அடுத்தடுத்து திருச்சி வந்தன. அந்த விமானங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்கள் ஆண்கள், பெண்கள் என சுமார் 150 பேர் இருமுடி கட்டி வந்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து 4 பஸ்களில் அவர்கள் சபரிமலை புறப்பட்டு சென்றனர். அந்த குழுவில் உள்ள குருசாமிகள் கூறுகையில், ‘மலேசியாவிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் பேர் திருச்சி வழியாக சபரிமலைக்கு வந்து சென்றுள்ளனர். இன்று (நேற்று) 150 பேர் வந்துள்ளோம். இன்னும் 2 விமானங்களில் 150 பேர் வருகிறார்கள்’ என்றனர்.
