×

எழுமூர் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

குன்னம், ஜன.3: குன்னம் அருகே எழுமூர் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே எழுமூர் கிராமத்தில் அருண் மருத்துவமனை மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை மருத்துவர் கொளஞ்சிநாதன் தலைமையில் நடத்தியது. பொது மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இசிஜி பரிசோதனைகள் செய்தனர்.

முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் காய்ச்சல், இருமல், சளியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

5 நபர்களுக்கு வாக்கர், வாக்கர் ஸ்டிக், மற்றும் 5 நபருக்கு ட்ரை சைக்கிள், வழங்கினர். இம்முகாமில் மருத்துவ மாணவருக்கு ஸ்டெத்ஸ்கோப் வழங்கப்பட்டது. முகாமில் எழுமூர் கிராமத்தை சுற்றியுள்ள ஆய்குடி, காருகுடி கிராமங்களை சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதேபோல் வடக்கலூர் மற்றும் துணிஞ்சப்பாடி கிராமங்களில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

 

Tags : Egmore ,Kunnam ,Arun Hospital ,Youth Welfare Association ,Perambalur district ,Dr. ,Kolanchinathan… ,
× RELATED செட்டிகுளம் முருகன் கோயில் உண்டியலில் ரூ.9.62 லட்சம் காணிக்கை