- வடக்கு கோடை மேலழகியன் கால்வாய்
- Vikepuram
- நெல்லை மாவட்டம்
- கலெக்டர்
- சுகுமார்
- விகேபுரம் வடக்கு கோடை மேலழகியன் கால்வாய்
- விகேபுரம் கிருஷ்ணன் கோயில் பாலம்
விகேபுரம், ஜன.1:நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் வழிகாட்டுதலின்படி, விகேபுரம் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், விகேபுரம் கிருஷ்ணன் கோயில் பாலம் வடக்கு, தெற்கு முகப்புகளில், கால்வாய் நீரில் மிதந்து வந்து தேங்கி கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள், இறைச்சி, கோழி குடல் கழிவுகள், துணிகள், தலையணை, பெட், அமலச்செடிகள், பிளாஸ்டிக் சாக்குகளில் அடைக்கப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட பல்வேறு கழிவுகள், செடிகள் மற்றும் இறந்த பிராணிகளின் கழிவுகள் அகற்றப்பட்டன.
அதேபோல் அப்பகுதி பாலத்தின் கீழ் நீரில் தேங்கிய கழிவுகள் அமலைச்செடிகள், கிரிக்கெட் மூர்த்தி தலைமையில் 2.10 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. தூய்மை பணியில் மலைசுந்தரம், அந்தோணி, ராமசாமி, ராமமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர்.
