- வன்னார்பேட்டை
- நெல்லை
- தியாகி விஸ்வநாத தாஸ்
- வண்ணார்பேட்டை, நெல்லை
- தேசிய கவுன்சில்
- ஜனாதிபதி
- சுரேஷ் முத்துராஜ்
- பொருநை இலக்கிய வட்டம்
- ஆதரவாளர்
- தளவாய் நாதன்
- தேசிய நல்லாசிரியர்...
நெல்லை ஜன.1: நெல்லை வண்ணாரப்பேட்டையில் தியாகி விஸ்வநாத தாஸ் 85வது நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தியாகி விஸ்வநாததாஸ் தேசிய பேரவை தலைவர் சுரேஷ் முத்துராஜ் தலைமை வகித்தார். பொருநை இலக்கிய வட்ட புரவலர் தளவாய் நாதன், தேசிய நல்லாசிரியர் செல்லப்பா, தமிழ் முழக்க பேரவை செயலாளர் நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை டீம் அசோசியேசன் செயலாளர் வக்கீல் செல்வ சூடாமணி வரவேற்றார்.
விஸ்வநாததாஸ் படத்திற்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரிய தலைவர் விஜிலா சத்யானந்த் மாலை அணிவித்தார். பேராசிரியர்கள் ஆறுமுகம் மகாலெட்சுமி, தமிழ் முழக்க பேரவை இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், டீம் அசோசியேசன் துணைத்தலைவர்கள் மீனாட்சிசுந்தரம், நமச்சிவாயம், ராஜேந்திரன், உள்தணிக்கையாளர் சங்கர நயினார், ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேசிய பேரவை செயலாளர் சிதம்பரம் நன்றி கூறினார். தியாகி விஸ்வநாதாஸ் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
