×

மது விற்ற வழக்கில் 39 பேர் அதிரடி கைது

அரூர், ஜன.1: அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில், போலீசார் நடத்திய சோதனை நடத்தினர். அப்போது, அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம், மதுபாட்டில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்த வழக்கில் ஓட்டல், பெட்டிக்கடையில் குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் உள்பட அரூர், பொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 7 பெண்கள் உள்பட 39 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 832 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags : Aroor ,Aroor Prohibition Enforcement Unit ,Inspector ,Vasantha ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்