ஒவ்வொருவருக்கும் பெரும் தனம் ஈட்டக்கூடிய ஆவல் உண்டாகும். அது கண்டிப்பாக நியாயமான வழியாகவும் நமக்கு வாய்ப்பு அமையும் பட்சத்தில்தான் தன யோகம் என்ற மஹாதன யோகம் ஏற்படும். அவரவர் ஜாதகத்தில் பெரும் தனத்தை வருவிக்கக்கூடிய அமைப்பு இருந்தால்தான் அவர்களின் செயல் பெரும் தனத்தை ஈர்க்கக்கூடிய செயல்களின் மூலம் மஹாதனத்தை பெறுவர்.இந்த யோகத்திற்கு மஹாதன யோகம் என்று பெயர்.
மஹாதன யோகம் என்றால் என்ன?
சுய ஜாதகத்தில் (2ம்) இரண்டாம் அதிபதியான தனாதிபதி, (9ம்) ஒன்பதாம் அதிபதியான பாக்கியாதிபதி, (11ம்) பதினொராம் அதிபதியான லாபாதிபதி இணைவு பெற்றிருந்தாலும் இந்த 2ம், 9ம், 11ம் அதிபதிகள் திரிகோணங்களில் இணைவு பெற்றிருந்தாலும் பரிவர்த்தனை அடைந்திருந்தாலும் ஜாதகர் ஏதோ ஒரு வகையில் பெரும் தனம் எனச் சொல்லப்படுகின்ற மஹா தனத்தை அடைவார் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாகவே தனாதிபதியும் (2ம்), பாக்கியாதிபதியும் (9ம்) இணைவு பெற்றிருந்தால் அது லெட்சுமி யோகமாக ஜாதகருக்கு அமையும். அதனுடன் (11ம்) பதினொராம் அதிபதி என்று சொல்லக்கூடிய லாபாதிபதியும் இணையும் பட்சத்தில் மஹாதன யோகம் ஏற்படுகின்றது. மேலே குறிப்பிட்ட பாவாதிபதிகளும் 11ம் பாவகத்திலோ அல்லது கேந்திரங்களில் இணைவு பெறுவது சிறப்பான அமைப்பாக உள்ளது.
லக்னத்தை அடிப்படையாகக் கொண்ட மஹாதன யோகம்
மேஷ லக்னத்திற்கு – (2ம்) இரண்டாம் அதிபதியான தனாதிபதி சுக்கிரன்; (9ம்) அதிபதியான பாக்யாதிபதி வியாழன்; (11ம்) அதிபதியான லாபாதிபதி சனி ஆகியவை இணைவு பெற்றிருப்பதே மஹா தன யோகம். ஆனால், இதில் ஒரு கிரகத்திற்கு மற்றொரு கிரகம் பகை பெற்றிருக்குமாயின் தன யோகத்தில் அளவீடுகள் மாறுபடுகின்றது. மேஷ லக்னக்காரர்களுக்கு 60% மட்டுமே வாய்ப்புகளாக உள்ளன.
ரிஷப லக்னத்திற்கு – (2ம்) இரண்டாம் அதிபதியான தனாதிபதி புதன்; (9ம்) அதிபதியான பாக்யாதிபதி சனி; (11ம்) அதிபதியான லாபாதிபதி வியாழன் ஆகியவை இணைவு பெற்றிருப்பதே மஹா தன யோகம். ஆனால், இதிலும் சனி மற்றும் வியாழன் இணைவு நற்பலன்களை ஏற்படுத்தும். ஜோதிட விதியின் அடிப்படையில் வியாழன் ஒரு கிரகத்துடன் இணைவு பெற்றால்தான் பெரும் தன யோகத்தை ஏற்படுத்தும். ஆகவே, ரிஷப லக்னக்காரர்களுக்கு 80% யோகம் ஏற்படுகின்றது.
மிதுன லக்னத்திற்கு – (2ம்) இரண்டாம் அதிபதியான தனாதிபதி சந்திரன்; (9ம்) அதிபதியான பாக்யாதிபதி சனி; (11ம்) அதிபதியான லாபாதிபதி செவ்வாய் ஆகியவை இணைவு பெற்றிருப்பதே மஹாதனயோகம். ஆனால், செவ்வாய் – சனி யுத்த கிரகமாக உள்ளதால் சில அதீத முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகே பெரும் தனத்தை ஈர்க்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆனால் 11ம் பாவகத்தில் இவர்கள் இணைவு பெற்றிருந்தால் 95% சதவீதம் பெரும் தனத்தை கொணர்வர்.
கடக லக்னத்திற்கு – (2ம்) இரண்டாம் அதிபதியான தனாதிபதி சூரியன்; (9ம்) அதிபதியான பாக்யாதிபதி வியாழன்; (11ம்) அதிபதியான லாபாதிபதி சுக்கிரன் ஆகியவை இணைவு பெற்றிருப்பதே மஹா தனயோகம். ஆனால், சுபகிரகங்கள் இணைவு உள்ளதால் எளிமையாக மஹா தனத்தை ஏற்படுத்தும். 95% பெரும் தனத்தை ஏற்படுத்தும்.
சிம்ம லக்னத்திற்கு – (2ம்) இரண்டாம் அதிபதியான தனாதிபதி புதன்; (9ம்) அதிபதியான பாக்யாதிபதி செவ்வாய்; (11ம்) அதிபதியான லாபாதிபதி புதன் ஆகியவை இணைவு பெற்றிருப்பதே மஹாதனயோகம். ஆனால், இதில், செவ்வாய் – புதன் பகை பெற்றிருந்தாலும் புதன் லாப ஸ்தானத்தில் இருந்தாலும் மிகுந்த நல்ல அமைப்பாகும். இது 99% பெரும் தன யோக அமைப்பாகும்.
கன்னி லக்னத்திற்கு – (2ம்) இரண்டாம் அதிபதியான தனாதிபதி சுக்கிரன்; (9ம்) அதிபதியான பாக்யாதிபதி சுக்கிரன்; (11ம்) அதிபதியான லாபாதிபதி சந்திரன் ஆகியவை இணைவு பெற்றிருப்பதே மஹா தனயோகம். ஆனால், இதில் வளர்பிறை சந்திரனாக அமைந்து ரிஷபத்தில் இணைவு பெற்றிருப்பின் லெட்சுமி கடாட்சம் பெற்ற ஜாதகமாக உள்ளது. இவர்கள் ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும் பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
துலாம் லக்னத்திற்கு – (2ம்) இரண்டாம் அதிபதியான தனாதிபதி செவ்வாய்; (9ம்) அதிபதியான பாக்யாதிபதி புதன்; (11ம்) அதிபதியான லாபாதிபதி சூரியன் ஆகியவை இணைவு பெற்றிருப்பதே மஹா தனயோகம். ஆனால், இதில் ஒரு கிரகத்திற்கு மற்றொரு கிரகம் பகை பெற்றுள்ளது. மருத்துவம் தொடர்பான அமைப்புகள் இவர்களுக்கு இருக்கும்.
விருச்சிக லக்னத்திற்கு – (2ம்) இரண்டாம் அதிபதியான தனாதிபதி வியாழன்; (9ம்) அதிபதியான பாக்யாதிபதி சந்திரன்; (11ம்) அதிபதியான லாபாதிபதி புதன் ஆகியவை இணைவு பெற்றிருப்பதே மஹாதனயோகம். இந்த இணைவு சிறப்பான அமைப்பாகும். இக்கிரகங்கள் இணைவு பெற்று கன்னியில் இருந்தால் 99% மஹாதனத்தை ஏற்படுத்தும்.
தனுசு லக்னத்திற்கு – (2ம்) இரண்டாம் அதிபதியான தனாதிபதி சனி; (9ம்) அதிபதியான பாக்யாதிபதி சூரியன்; (11ம்) அதிபதியான லாபாதிபதி சுக்கிரன் ஆகியவை இணைவு பெற்றிருப்பதே மஹாதனயோகம். சூரியன் – சனி பகை கிரகமாயினும் ஜாதகருக்கு அதிக படபடப்பை ஏற்படுத்தும். இது 85% மஹாதன யோகத்தை ஏற்படுத்தும்.
மகர லக்னத்திற்கு – (2ம்) இரண்டாம் அதிபதியான தனாதிபதி சனி; (9ம்) அதிபதியான பாக்யாதிபதி புதன்; (11ம்) அதிபதியான லாபாதிபதி செவ்வாய் ஆகியவை இணைவு பெற்றிருப்பதே மஹாதனயோகம். ஆனால், செவ்வாய் – சனி யுத்தம் ஆகையால், கட்டிடத்துறை, இண்டஸ்ரியல் மற்றும் ரியல் எஸ்டேட் சிறப்பாக இருக்கும்.
கும்ப லக்னத்திற்கு – (2ம்): இரண்டாம் அதிபதியான தனாதிபதி வியாழன்; (9ம்) அதிபதியான பாக்யாதிபதி சுக்கிரன்; (11ம்) அதிபதியான லாபாதிபதி வியாழன் ஆகியவை இணைவு பெற்றிருப்பதே மஹாதனயோகம். நகை வியாபாரம் மற்றும் டெக்ஸ்டைல் துறைகளில் சிறப்பு சேர்க்கும்.
மீனம் லக்னத்திற்கு – (2ம்) இரண்டாம் அதிபதியான தனாதிபதி செவ்வாய்; (9ம்) அதிபதியான பாக்யாதிபதி செவ்வாய்; (11ம்) அதிபதியான லாபாதிபதி சனி ஆகியவை இணைவு பெற்றிருப்பதே மஹாதனயோகம். செவ்வாய் – சனி யுத்தம் ஆகையால், கட்டிடத்துறை, இண்டஸ்ரியல் மற்றும் ரியல் எஸ்டேட் சிறப்பாக இருக்கும்.
கலாவதி
