×

போலீஸ்காரரை கத்தியால் குத்த முயன்ற வாலிபர்

திருப்பூர், டிச. 31: திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி காலை முதல் ஏராளமான பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று வருகின்றனர். திருப்பூர் தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போதை வாலிபரிடம் போலீஸ்காரர் ராமகிருஷ்ணன் விசாரித்தார்.

அப்போது வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வாலிபர், கத்தியால் போலீஸ்காரரை குத்த முயன்றார். சுதாரித்த ராமகிருஷ்ணன், தனது பெல்ட்டை கழற்றி தற்காத்து கொண்டார். மற்ற போலீசார் வாலிபர் மடக்கி சோதனை செய்தனர். அவரது பாக்கெட்டில் மிளகாய் பொடியும் இருந்தது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags : Tiruppur ,Veeraragava Perumal temple ,Tiruppur South Police ,
× RELATED காங்கயத்தில் சேவல் சூதாட்டம்: 9 பேர் கைது பைக், கார் பறிமுதல்