×

அண்ணாமலை ஆட்டத்தை கடந்த தேர்தலிலும் பார்த்தோம்: துரை வைகோ பதிலடி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை.வைகோ எம்பி நேற்று அளித்த பேட்டி: திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று விஜய் கூறுவது அவருடைய ஜனநாயக உரிமை. ஆனால் எங்களை பொறுத்தவரை மற்ற கட்சிகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை. 2026 தேர்தலில் 10 தொகுதி வேண்டும் என வைகோ கேட்டுள்ளதாக வரும் தகவல் உண்மைக்கு புறமானது. மதிமுகவை பொறுத்தவரை, கூட்டணி மந்திரி சபை வேண்டுமென்று நாங்கள் என்றைக்கும் கேட்டது கிடையாது. எங்களுடைய ஒரே குறிக்கோள் மதவாத சக்திகள் தமிழ்நாட்டிற்குள் வேரூன்ற கூடாது என்பதுதான். தவெக தலைவர் விஜய், அதிமுகவோடு அல்லது பாஜவோடு கூட்டணி போக வாய்ப்பு கிடையாது. விஜய்யின் வருகையால் திமுக கூட்டணியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அண்ணாமலை மற்றும் என்னுடைய ஆட்டத்தை இனி தான் பார்க்கப்போகிறீர்கள் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, ‘அண்ணாமலை ஆடிய ஆட்டத்தை கடந்த தேர்தலில் நாங்கள் பார்த்தோம். பாஜ தனியாக களத்தில் நின்றால் அவர்களுடைய உண்மையான வாக்கு சதவீதம் தெரியவரும். 2024 தேர்தலில் 16 கட்சிகளை ஒன்றிணைத்து 18 சதவீத வாக்குகளை பெற்றார்’ என்றார்.

Tags : Annamalai ,Durai Vaiko ,Pudukkottai ,MDMK ,Principal Secretary ,Durai ,Vaiko ,Vijay ,DMK ,
× RELATED 2024ல் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு...