×

பகவதியம்மன் கோயில் விழா

பரமத்திவேலூர், டிச.31: பரமத்திவேலூர் மேலத்தெருவில் உள்ள பகவதியம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, கடந்த 27ம் தேதி அய்யர் கட்டளையும், மறுநாள்(28ம் தேதி) வடிசோறு நிகழ்ச்சியும், 29ம் தேதி பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. நேற்று(30ம் தேதி) திருத்தேர் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இன்று(31ம் தேதி) தீமிதி விழா நடைபெறுகிறது. நாளை(1ம் தேதி) பொங்கல் மாவிளக்கு பூஜையும், 2ம் தேதி மஞ்சள் நீராடல் விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பகவதியம்மன் கோயில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags : Bhagavathiyamman Temple Festival ,Paramathivellur ,Melatheru ,Ayyar Kattamala ,Vadishoru ,Thiruveethi Ula… ,
× RELATED வேன் கவிழ்ந்து விவசாயி பலி