- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உதயநிதி ஸ்டாலின்
- திமுகா மகளிர் அணி மாநாடு
- துணை
- தலைமை உதவி செயலாளர்
- ஸ்டாலின்
- வடமண்டல இளைஞர் அணி நிர
- திருவண்ணாமலை
திமுக மகளிர் அணி மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 14ம்தேதி திருவண்ணாமலையில் வடக்கு மண்டல இளைஞர்அணி நிர்வாகிகள் கூட்டம் நடத்தினோம். 1.30 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அங்கு கலந்துகொண்ட இளைஞர்களின் பெருங்கடலை பார்த்து, சங்கி கூட்டம் அலறியது. பல்லடம் மகளிர்அணி மாநாட்டு கூட்டத்தை பார்த்தாலும் சங்கி கூட்டமும், அடிமை கூட்டம் இன்னும் 10 நாட்கள் தூங்க மாட்டார்கள். திமுகவின் ஆட்சிக்கு இங்கு கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி.
தமிழ்நாட்டின் மகளிருக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மகளிருக்குமான குரலாக முதலமைச்சரின் குரல் உள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பத்திரிகையாளர் சந்திப்பில்கூட நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தைரியத்தை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். மொழி உரிமை, மாநில உரிமை என்று வந்தால் நமது முதலமைச்சர் பெயர்தான் ஞாபகத்திற்கும் வரும். இதெல்லாம் பிடிக்காத ஒன்றிய பா.ஜ., அரசு தமிழ்நாட்டிற்கு பல்வேறு வகையில் தொந்தரவுகளை கொடுத்து வருகிறது.
சுயமரியாதைமிக்க மகளிர் இங்கு இருக்கும் வரை சங்கிகளால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது. தமிழ்நாடு தந்தை பெரியார் உருவாக்கிய சமத்துவ பூங்கா. இங்கு அமைதி, சகோதரத்துவம், மதநல்லிணக்கம்தான் என்று நிலைத்திருக்கும். அமைதி பூங்காவில் அத்துமீறி நுழைய பாசிஸ்டுகள் நினைத்தால், அவர்களை விரட்டியடிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பாசிஸ்டுகளுக்கு சலாம் போட்டு, தமிழ்நாட்டின் கதவுகளை திறந்துவிட நாங்கள் அதிமுக அல்ல. இது, அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக. இது பெரியார், அண்ணா, கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்ட கழகம். 2026 சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டில், 7வது முறையாக திமுக ஆட்சி அமைய, இரண்டாவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பதவியில் அமர சபதம் ஏற்போம். அதற்கு இந்த மாநாடு அடித்தளமாக அமைய வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
