×

மக்கள் மனம் கவர்ந்தவராக அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வலம் வருகிறார்: கே.எஸ்.ரவி புகழாரம்

காரைக்குடி, டிச. 30: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கிராமக்களின் முன்னேற்றத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களை நிறைவேற்றி தந்து மக்கள் மனம் கவர்ந்த செட்டிநாட்டு செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார் என மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிக்கையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எங்கள் பகுதிக்கு எண்ணற்ற பணிகளை செய்து பொதுமக்களின் தேவையை 100 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மிகச்சிறிய ஒன்றியமான சாக்கோட்டை ஒன்றியத்துக்கு விவசாய கல்லூரி, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்களை பெற்று தந்துள்ளார். கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் முன்னேற்றத்துக்கு தேவையான திட்டங்களை பூர்த்தி செய்து மக்கள் மனம் கவர்ந்த செட்டிநாடு செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார்.

தொகுதியில் எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் அவரின் பங்களிப்பு இல்லாமல் நடக்காது. அனைத்து சமுதாய மக்களின் இல்லவிழாக்களில் கலந்து கொள்வதை தனது கடமையாக கருதி செயல்பட்டு வருகிறார். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கிராம மக்கள் போற்றும் செட்டிநாடு செல்லப்பிள்ளையாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வலம் வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனை மக்களின் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம்’’என்றார்.

Tags : Minister ,KR ,K. S. Ravi ,Karaikudi ,Minister of Cooperatives ,K. R. State ,Chief Public Committee Member ,Dolathoor K. S. Ravi ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்