- பாஜக
- சட்டமன்ற உறுப்பினர்
- குல்தீப் சிங் செங்கர்
- Unnav
- தில்லி
- உச்ச நீதிமன்றம்
- குல்தீப் சிங் செங்கர்
- உன்னாவோ
- குடீப்
- BJP MLA
- உத்திரப்பிரதேசம்
- பங்கர்மாவு
டெல்லி : உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2017ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த குவ்தீப் சிங் செங்கார், சிறுமி ஒருவரை கடத்தி வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த அம்மாநில போலீசார் செங்காரை கைது செய்தனர். இதற்கிடையே, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளிட்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சென்ற கார் மீது, லாரி மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமியுடன் சென்ற உறவினர்களில் இருவர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, சிறுமி வன்கொடுமை வழக்கு மற்றும் விபத்து தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை, சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என செங்கார் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவரின் தண்டனையை நிறுத்தி வைத்தும், ஜாமீன் வழங்கியும் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரிய விவாதத்தை கிளப்பியது. இதைத் தொடர்ந்து செங்கரின் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதிகள் சூர்ய காந்த் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “பொதுவாக தண்டனையை இடைநிறுத்துவது தொடர்பான உத்தரவுகளில் உச்சநீதிமன்றம் தலையிடாது. ஆனால், குற்றவாளி வேறு ஒரு குற்றத்திற்காக சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். இது அசாதாரணமான சூழ்நிலையாக இருக்கிறது. மட்டுமல்லாது உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் சட்ட கேள்விகள் பல எழுந்திருக்கின்றன” என்று கூறி தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை ரத்து செய்துள்ளது.
