சென்னை : சென்னை பல்கலைக்கழக மசோதாவை 3 ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்த நிலையில் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினார். தமிழகத்தில் உள்ள பல்கலை கழகங்களில் சென்னை பல்கலை கழகமானது பழமையான பல்கலை கழகமும், பாரம்பரியமான பல்கலை கழகமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த பல்கலை கழகத்தின் துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்ட தொடரில் மசோதாவானது நிறைவேற்றப்பட்டது.
அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவந்தார். இந்த மசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் பேசியநிலையில் சட்ட மசோதாவானது நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சட்ட மசோதாவை தற்போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திருப்பி அனுப்பியுள்ளார். சுமார் 3 ஆண்டு காலம் கழித்து கடந்த 2022 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பிய நிலையில், அவரும் திருப்பி அனுப்பினார்.
