×

சென்னை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகேயுள்ள இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனபாண்டி மகன் சுந்தர் (31). இவர் சென்னை மவுன்ட் பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் கடந்த 8 மாதங்களாக சுந்தர் விடுமுறையில் சொந்த ஊரான இருமன்குளம் வந்துள்ளார்.

அங்கு தனது தந்தையை பராமரித்து வந்த நிலையில் விடுமுறை முடிந்து நாளை (30ம் தேதி) மீண்டும் பணியில் சேர்வதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி வீட்டிலிருந்த சுந்தர் திடீரென பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Chennai ,Sankarankovil ,Sundar ,Chandanapandi ,Irumankulam ,Chennai Mount Battalion ,
× RELATED இன்று மோகினி அலங்காரத்துடன் பகல்...