தோகைமலை, டிச, 27: தோகைமலை அருகே நாகனூர் மணச்சணம்பட்டியில் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி மணச்சணம்பட்டி சதீஷ் என்பவரின் மனைவி தீபிகா (23). இவருக்கும் சதீஷிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மேலும் தீபிகா, சதீஷ் ஆகிய இருவரும் கட்டிடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி, வேலைக்கு இருவரும் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து உள்ளனர். அன்று இரவு 8 மணி அளவில் தீபிகா வீட்டில் இருந்து வெளியில் சென்று உள்ளார். பின்னர் வெளியில் சென்ற தீபிகா வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் தங்களது உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மாயமான தீபிகா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தீபிகாவை தீவிர்மாக தேடி வருகின்றனர்.
