கருர், டிச. 27: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான வேளாண் விற்பனை கண்காட்சியை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைபராமரிப்புத் துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் விளக்க கண்காட்சியும், துறை சம்பந்தமான பொருட்கள் விற்பனை கண்காட்சி இடம் பெற்றிருந்தன. இதனை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து விவசாயிகளும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
